புழல் சிறையில் பதற்றம் : ஆம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்குள் மோதல்: சிறைகாவலர் மீது தாக்குதல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கடுமையாக கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சண்டையை தடுக்க சென்ற சிறை காவலர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ரவுடிகள் பொன்னை பாலு, புதூர் அப்பு, மணிவண்ணன்.இவர்கள் உயர் பாதுகாப்பு சிறை பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொன்னை பாலுக்கும் புதூர் அப்புக்கும் ஒரு வழக்கு தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
இன்று காலை புழல் சிறை 1-ல் ரவுடி புதூர் அப்புவிடம், பொன்னை பாலு, மணிவண்ணன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டையால் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு ஓடி சென்று தடுத்த போது அவரையுமே தாக்கியதால் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து மற்ற சிறைக்காவலர்கள் வந்து தடுத்தனர். இந்த தாக்குதலில் புதூர் அப்பு, உதவி சிறைஅலுவலர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக புழல் சிறை தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 2 பேருக்கும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ட்டது.
What's Your Reaction?

