'உங்க சங்காத்தமே வேணாம்!: டிச 24-ல் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஓபிஎஸ்
இனி பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை என்பதால், புதிய கூட்டணிக்கு பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். இதற்கான அறிவிப்பை டிச 24-ம் தேதி ஓபிஎஸ் வெளியிட இருக்கிறார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை தழுவினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் எடப்பாடி அதற்கு முட்டுகட்டை போட்டு வருகிறார். ஓபிஎஸ் கட்சியில் மட்டுமல்ல, கூட்டணியில் கூட சேர்க்க முடியாது என பாஜக தலைமையிடம் எடப்பாடி கறாராக கூறிவிட்டார்.
இதனால் என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறுவதாக பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற பன்னீர்செல்வம் அங்கு அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
அப்போது தனது தரப்பு கோரிக்கைகளை அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த தகவல் எடப்பாடியிடம் பரிமாறப்பட்டது. அதற்கும் எடப்பாடி நோ சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் டிச 15-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் பாஜகவிடம் இருந்து பாஸிடிவ் ஆன தகவல் வரவில்லை என்பதால். இனியும் இவர்களை நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு பன்னீர்செல்வம் வந்துவிட்டார்.
டிச 24-ம் தேதி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் பன்னீர்செல்வம். அன்றைய தினம் தனது புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?

