ஓபிஎஸ், டிடிவிக்கு நோ சொன்ன எடப்பாடி: அவசரமாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது எடப்பாடி காட்டிய கறார் காரணமாக, அவசர பயணமாக நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார் அதிமுக உடனான கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார்.இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பு,தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது கூட்டணியில் எந்த கட்சியை இணைக்க வேண்டும், எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக தான் முடிவு செய்யும் என நயினாரிடம் எடப்பாடி உறுதியாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக கட்சியில் தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை இணைக்க முடியாது என தெரிவித்துள்ளீர்கள்.
கூட்டணியில் இணைத்துகொள்ளாலாமே என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லையென எடப்பாடி மறுத்துள்ளார். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று அவசரமாக நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவிடம் எடப்பாடி கூறிய தகவல்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மறுதினம் அமித்ஷா தமிழகம் வரும் போது புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பதால் கமலாலயம் கவலையில் உள்ளது.
What's Your Reaction?

