அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு.. வக்கீலை துணைக்கு கேட்ட ஜாபர் சாதிக்.. அதிரடியாக உத்தரவிட்ட டெல்லி கோர்ட்
அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜாபர் சாதிக் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும், சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் அவர் மீது மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டியுள்ள அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கிடம் டெல்லி திகார் சிறைக்குள் சென்று விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் விசாரணையின் போது தன்னுடைய வழக்கறிஞர் தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜாபர் சாதிக் டெல்லி பாட்டியாலயா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது
விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் என ஜாபர் சாதிக் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாபர் சாதிக் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நாளை வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில் தன்னுடைய 2 சொகுசு கார்களை வழக்கில் சம்பந்தமில்லாமல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதனை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மனு விசாரணைக்கு வருவதற்குள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2 சொகுசு கார்களையும் ஜாபர் சாதிக்கிடமே திரும்ப ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?