இலங்கைக்கு கடத்தல்.. பிக்-அப் வேனில் இருந்த மர்ம பொருள்.! கோவில்பட்டியில் சிக்கிய வேன் டிரைவர்

அவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்றும், அதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இலங்கைக்கு கடத்தல்.. பிக்-அப் வேனில் இருந்த மர்ம பொருள்.! கோவில்பட்டியில் சிக்கிய வேன் டிரைவர்

கோவில்பட்டி அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1.3 டன் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தொடர்ந்து அங்கு சென்ற கியூ பிரிவு போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பிக்-அப் லோடு வாகனத்தை நிறுத்தி சோதித்தபோது, வாகனத்தின் பின்புறத்தில் கருப்பு கவர்களில் பல மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதை சோதித்தபோது டன் கணக்கில் பீடி இலைகள் இருந்துள்ளது. 

தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய டிரைவர் சூரியகுமார் என்பவரை போலீசார் கைது செய்து, வாகனத்தில் இருந்த 1.3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.  அவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்றும், அதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow