தீவிர பிரசாரத்தில் பால் கனகராஜ் "கூகுள் செய்து பார்த்தாலே தெரியும்" உதயநிதிக்கு பதிலடி...

வட சென்னை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளரான பால் கனகராஜுக்கு, பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Apr 13, 2024 - 11:07
தீவிர பிரசாரத்தில் பால் கனகராஜ் "கூகுள் செய்து பார்த்தாலே தெரியும்" உதயநிதிக்கு பதிலடி...

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனிடையே, வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், தொகுதி முழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர் என்றும், மக்கள் உற்சாகப்படுத்துவது வெற்றியின் பாதையாகவும், பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் எனவும் நம்புவதாக தெரிவித்தார்.

 

பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கேட்பவர்கள், கூகுளில் சென்று பார்த்தாலே தெரியும் எனவும், உலக அரங்கில் பிரதமர் மோடியின் அரசை பாராட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

 

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் வாக்குகள் கிடைக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர்,  பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினால் அமோகமாக வரவேற்போம் என்றும், தேர்தல் முடிவு அவர்களுக்கு பதில் சொல்லும் எனவும் கூறினார்.

 

சென்னையில் வந்து தங்குவதற்கு ஏராளமானோர் விரும்புகிறார்கள், உதாரணமாக தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழ்நாட்டில் வீடு வாங்கியுள்ளதாகவும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினால் பெரிய பாக்கியம் என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow