"இந்த மூஞ்சி தான என்ன ஏமாத்துச்சு..." கன்னத்திலேயே வெட்டிய காதலன்... திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பத்தூர்ல, கல்யாணமாகி 5 வயசுல குழந்தை இருக்குற பெண்ணோட முகத்துல சரமாரியா வெட்டிய முன்னாள் காதலன், போலீஸ் ஸ்டேசன்ல சரணடைஞ்சிருக்குறது பரபரப்ப ஏற்படுத்தி இருக்கு. 

"இந்த மூஞ்சி தான என்ன ஏமாத்துச்சு..." கன்னத்திலேயே வெட்டிய காதலன்... திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ் காந்தி நகர் பகுதிய சேர்ந்த குமார் என்பவரடோ மகள் இந்துமதி. இவரும் அதே பகுதிய சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமாரும் காதலிச்சு வந்ததாக கூறப்படுது.

இந்த காதல ஏத்துகாத இந்துமதியோட குடும்பத்தார், ஏழு வருசத்துக்கு முன்னாடி வாணியம்பாடிய சேர்ந்த கார்த்தி என்பவரோட இந்துமதிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. இப்போ, அவங்களுக்கு 5 வயசுல ஒரு பெண் குழந்தையும் இருக்கு.

இந்த நிலையில, கணவர் கார்த்திக்கோட ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமா, 6 மாசத்துக்கு முன்னாடியே ராஜீவ்காந்தி நகர்ல இருக்குற அம்மா வீட்டுக்கு இந்துமதி வந்திருக்காங்க. இத தொடர்ந்து, முன்னாள் காதலன் அஜித் குமார், இந்துமதி இடையே மீண்டும் காதல் மலர்ந்திருக்கு. ரெண்டு பேரும் கொஞ்ச நாள் நல்லா பேசி வந்த நிலையில, திடீர்னு அஜித்குமார்ட இந்துமதி பேச மறுத்ததா கூறப்படுது. 

இதனால விரக்தியில இருந்த அஜித்குமார், திருப்பத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டுல ஆட்டோ ஓட்டிட்டு போறப்போ, எதர்ச்சையா இந்துமதிய பார்த்ததும், பேச முயற்சி பண்ணியிருக்காரு. அப்போ ரெண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால ஆத்திரமடைந்த அஜித்குமார், தான் வச்சிருந்த கத்தியால இந்துமதி முகம், உடம்பு என சரமாரிய வெட்டிட்டு அங்கிருந்து தப்பிச்சு ஓடிட்டாரு. 

ரத்த வெள்ளத்துல இருந்த இந்துமதிய மீட்ட பொதுமக்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்த்தாங்க. உயிருக்கு ஆபத்தான நிலைய இந்துமதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்துட்டு வராங்க. இத கேள்விப்பட்ட அஜித்குமார், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தானா சரணடைஞ்சிருக்காரு. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமா இருக்குற திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டுல, பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்ப ஏற்படுத்தி இருக்கு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow