பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை... தடுக்க சென்றவரை வெட்ட பாய்ந்த கும்பல்.. மனதை பதைபதைக்க வைக்கும் வேளச்சேரி சம்பவம்...

வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Mar 30, 2024 - 14:16

சென்னை வேளச்சேரி சேவா நகரில் வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் தி.நகர் மேட்லி சாலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவர் நின்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பழனிச்சாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. அப்போது தடுக்க வந்தவர்களையும் அக்கும்பல் வெட்ட முயற்சித்துள்ளது. 

இதில் படுகாயமடைந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பழனிச்சாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பழனிச்சாமியை வெட்டிக் கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow