சொல்லி அடித்தார் கௌதம் கம்பீர்.. அணிக்காக ஒற்றை நம்பிக்கையாக போராடிய கோலி... இறுதியாக நடந்த ட்விஸ்ட்..!

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் பெங்களுரூவை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

Mar 30, 2024 - 04:44
Mar 30, 2024 - 05:34
சொல்லி அடித்தார் கௌதம் கம்பீர்.. அணிக்காக ஒற்றை நம்பிக்கையாக போராடிய கோலி... இறுதியாக நடந்த ட்விஸ்ட்..!

மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அடுத்து, ரசிகர்கள் விறுவிறுப்பாக எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்று கொல்கத்தா - பெங்களுரூ அணிகளின் போட்டியாகும். ஏனெனில் கடந்த காலத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தபோது, பெங்களுரூ அணி கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். அப்போது பல போட்டிகளில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இருவரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு மோதும் அளவுக்கும் சென்றிருக்கின்றனர். இதுமட்டுமின்றி கம்பீர் அணி வீரராக இல்லாமல், லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த போது (2023) கூட இருவருக்குள் வெடித்த கலவரத்தை ஐபிஎல் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதனடிப்படையில் இந்தாண்டு கொல்கத்தா அணி தலைவராக கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில், இருவருக்குள் இருக்கும் கடந்த கால பிரச்னை வெடிக்கும் என  எதிர்பார்ப்பு எகிறியது. அத்துடன் அணி வீரர்களின் பயிற்சியின் போது கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், "நான் எப்போதும் வெல்ல வேண்டும் என நினைக்கும் அணியாக ஆர்சிபி உள்ளது. அவர்களிடம் கோப்பை இல்லை என்றாலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், கோப்பை இருப்பதை போல உணர்கிறார்கள். அதனால் அவர்களை தோற்கடிக்க விரும்புவேன்" என தெரிவித்திருந்தார். இதனால் கோலி ரசிகர்கள் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் சாடி வந்தனர்.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களுரூ சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி விளையாடிய பெங்களுரூ அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. இதில் ஓபனராக இறங்கிய கோலி பொறுப்புடன் ஆடி 83 ரன்களை குவித்தார். இதைதொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி கொல்கத்தா பக்கம் சாய்ந்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில், போட்டி முடிந்ததும் கோலியும், கம்பீரும் கைக்குலுக்கி கட்டியணைத்து நலம் விசாரித்தனர். இந்த நிகழ்வை ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் எதிர்பார்த்திருக்க மாடார்கள். இதுவே போட்டியின் மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்தது.  இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி இந்தாண்டு ஐபிஎல்-ல், மற்றொரு அணியின் சொந்த மைதானத்தில் வெற்றியை ருசித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏனெனில் மற்ற 9 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் அனைத்தும் தங்களது சொந்த மைதானங்களிலேயே வெற்றியை பெற்றுள்ளன.

இதேவேளையில், கோலி ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார். அவர் அணிக்காக 241 சிக்சர்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்து கெயில் 239 சிக்சர்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow