அபாரமாக ஆடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்.. சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்திய LSG..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசன் 39-வது லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 6 சிக்ஸர்ஸ், 13 பவுண்டரிகளை விளாசி 124 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்றும் 2 தோல்வியடைந்தும் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவி 5 வது இடத்தில் உள்ளது.
டெல்லியில் இன்று (ஏப்ரல் 24) நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்டல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
What's Your Reaction?