சென்னையில் 10 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை... முகமூடி நபரின் துணிகரம்! அரும்பாக்கத்தில் அதிர்ச்சி

சென்னையின் முக்கியமான பகுதியில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Apr 23, 2024 - 21:55
சென்னையில் 10 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை... முகமூடி நபரின் துணிகரம்! அரும்பாக்கத்தில் அதிர்ச்சி

சென்னை அரும்பாக்கத்தில் ஒரே இரவில் டாஸ்மாக் கடை உள்பட 10 கடைகளில் முகமூடி அணிந்த நபர் நுழைந்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரும்பாக்கம் நூறடிச்சாலையில் உள்ள அரிசி கடை, கண்ணாடி கடை, ஹார்டுவேர்ஸ், டாஸ்மாக் கடை என தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியான உரிமையாளர்கள், உடனே இதுகுறித்து காவல்துறைக்குப் புகார் அளித்தனர். அதன்பேரில் அரும்பாக்கம் பகுதியில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட விசாரணையில் பெரிய அளவில் பொருட்கள் ஏதும் களவாடப்படவில்லை என்பதும், உடைக்கப்பட்டதில் சில காலி கடைகள் என்பதும் தெரியவந்தது.  

பொம்மைகள் விற்பனை செய்யும் கடையில் செல்போன் கல்லாவில் இருந்த சில்லறை பணம் மற்றும் சில பொருட்களையும் திருடி சென்றுள்ளார். மளிகை கடையிலும் ரூ.10,000 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளார். அதே போல அரும்பாக்கம் என்எஸ்கே நகரில் உள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர் கல்லாவில் இருந்த பணத்தை விட்டு சுமார் ரூ.15,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அரும்பாக்கம் 100 அடி சாலையில், காவல்துறையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் முக்கியமான பகுதியில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow