"இது தான் வேதா" ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன்... 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா!
ஐபிஎல்லின் 16வது லீக் போட்டியில் ஐதராபாத்துக்கு அடுத்தப்படியாக மீண்டுமொரு பிரம்மாண்ட ஸ்கோரை எட்டிய கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.விசாகபட்டினத்தில் நடந்த 16வது லீக் போட்டியில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதின, இதில் டாஸ் வென்று கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசிய அவர் வெறும் 39 பந்துகளில் 85 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார்.
எப்போதும் அதிரடி காட்டும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன் கடந்த சில வருடங்களாக பெரிதும் ஜொலிக்காமல், மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் நீண்ட நாளுக்கு பிறகு அவரது ராவானா ஆட்டத்தை ரசிகர்கள் ரசித்து என்ஞாய் செய்தனர். முன்னதாக 2012 முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நரைன், பந்துவீச்சாளர் மட்டுமே. ஆனால அவரின் பயமறியா பேட்டிங்கை பார்த்து 2017 முதல் கொல்கத்தா அணி அவரை ஒபனராக பயன்படுத்தி வருகிறது. அது பல நேரங்களில் பலனளித்தும் இருக்கிறது. குறிப்பாக இந்த போட்டியில் அவருக்கு கை கொடுத்து இருக்கிறது.
இந்த போட்டியில் நரைனுக்கு அடுத்தப்படியாக வந்த அங்கிரிஷ், ரஷல், ரிங்கு சிங்க் ஆகியோரும் பேட்டிகில் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர், 272ஐ தொட்டது. இதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத் அணி 277 ரன்களை குவித்து புதிய வரலாறு படைத்தது. அதற்கு சிறிய இடைவெளியின்றி கொல்கத்தா அதகளம் செய்திருக்கிறது.
வெற்றி பெற முடியாத இமாலய இலக்கு என்றாலும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி அதனை எதிர்த்து களமிறங்கியது. எனினும், கேப்டன் ரிஷப் பண்ட், த்ரிஷ்டன் ஸ்டப்பஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்களில் டெல்லி அணி பணிந்தது. இதன்மூலம் 106 ரன்களில் பிரம்மாண்ட வெற்றியை கொல்கத்தா அணி பெற்றதுடன், புள்ளி பட்டியலில் 3 போட்டிகள் விளையாடி 3லிம் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
What's Your Reaction?