இன்று ஹாட்ரிக் அடிக்குமா CSK?... சென்னை – டெல்லி இன்று பலப்பரீட்சை...

ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி.

Mar 31, 2024 - 11:18
Mar 31, 2024 - 11:22
இன்று ஹாட்ரிக் அடிக்குமா CSK?... சென்னை – டெல்லி இன்று பலப்பரீட்சை...

IPL தொடரில் இன்று குஜராத் – ஐதராபாத் மற்றும் சென்னை – டெல்லி அணிகள் மோதும் 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.  

 
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL தொடரில் இன்று (31.03.2024) 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. தற்போது லீக் போட்டிகளில் அனைத்து அணிகளும் ஒன்றோடு மோதி வருகின்றன. இதுவரை 11 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில், அகமதாபாத்தில்  இன்று மாலை 3.30 மணி நடைபெறவுள்ள 12வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

அடுத்ததாக மும்பை அணியுடன் விளையாடி ஐதராபாத், 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல், IPL வரலாற்றிலேயே 277 என அதிக ரன்களை குவித்த அணி என்ற மகத்தான சாதனையையும் படைத்தது. மறுபுறம் குஜராத் அணியோ தனது முதல் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் 2 அணிகளும் சம பலத்தில் மோதும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 13வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பின்னர் நடைபெற்ற 2வது போட்டியில் குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இன்று, ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காக சென்னை அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய டெல்லி அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் சென்னை அணியும், இந்த IPL தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் டெல்லி அணியும் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow