பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - சிராக் ஷெட்டி, ரான்கிரெட்டி ஜோடி பட்டம் வென்று சாதனை!
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, ரான்கிரெட்டி ஜோடி பட்டம் வென்று சாதனை படைத்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் நட்சத்திர ஆட்டக்கரர்களான லஷ்யா சென், பிவி சிந்து ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறினர். ஆனால், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வெற்றிக் கூட்டணியான சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை(10.03.2024) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி - தைவானின் லீ ஜே ஹூய் - போ ஷுவான் யாங் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-11, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சிராக் ஷெட்டி - ரான்கி ரெட்டி ஜோடி கைப்பற்றும் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?