2047-க்குள் வளர்ந்த இந்தியா..! - நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

Feb 1, 2024 - 16:07
Feb 1, 2024 - 16:11
 2047-க்குள் வளர்ந்த இந்தியா..! - நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

நாடாளுமன்றத்தில் இன்று பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில்:  "நாட்டில் 4 தரப்பு முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும்,  2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார்.  

வளர்ச்சியின் பயன்கள் அனைத்து மக்களையும் எட்டுகின்றன  எனக்கூறிய அவர், கடந்த  10 ஆண்டுகளில் ஏழ்மையின் பிடியிலிருந்து  ,பன்முக ஏழ்மை நிலையிலிருந்து  கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும், ஏழைகளுக்கான உதவிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் எனக் குறிப்பிட்டவர், அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்; 

மேலும்,  தற்சார்பு இந்தியா என்ற பாதையில் தேசம் நடைபோடுவதாகவும் கூறினார். விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நிதிப்பற்றாக்குறை தொடர்பாக பேசுகையில், நாட்டின் நிதிப்பற்றாகுறை வரும் நிதியாண்டில் 5.1 %-க்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும், நிதி பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் ரூ.26.02 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். உட்கட்டமைப்புகளுக்கான செலவீனம் ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும்,  தெரிவித்தார்.  

செயல்படுத்த இருக்கும் திட்டங்களாக  லட்சத்தீவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும்,  கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,  40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும் என்றும்.,  இளைஞர்களுக்கு கடனுதவி வழங்க ரூ.1 லட்சம் கோடி நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும். "9 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தட உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்; ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

"பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்; நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதோடு, வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என குறிப்பிட்டார்.

அடுத்த 50 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன்  வழங்கப்படும் எனவும் 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அதனைத்தொடர்ந்து, நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

வரி விதிப்பு தொடர்பாக , தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

2024-2025-ல்  சந்தைகளில் இருந்து ரூ.11.75 கோடி கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்,  மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக ரூ.1.66 லட்சம் கோடியை கடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பழைய வருமான வரி மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும், வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை எனவும் வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்;  தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ₹27.56 லட்சம் கோடி எனக் குறிப்பிட்ட அவர், நேரடி வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றார். 

அனைத்து மாநிலங்களுக்கான வளர்ச்சியை உள்ளடக்கியே மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் கூறினார். அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும் என்றும், வளர்ச்சிப்பணிக்காக மக்கள் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் எனவும் குறிப்பிட்டார். 

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும்,  முக்கிய தேவையாக மக்களால்  பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு குறித்த எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. 

இதையும் படிக்க | Paytm Payment-ல் இனி பண பரிமாற்றம் இல்லை.. அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow