Paytm Payment-ல் இனி பண பரிமாற்றம் இல்லை.. அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி !

ரிசர்வ் வங்கி Paytm பண மாற்றத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டியுள்ளது. பிப்ரவரி 29-ம் தேதியுடன் Paytm Payment வங்கி சேவை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக Paytm Payment வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும் அவர்களது கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Feb 1, 2024 - 13:39
Feb 1, 2024 - 13:41
Paytm Payment-ல் இனி பண பரிமாற்றம் இல்லை.. அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி !

ரிசர்வ் வங்கி paytm பண மாற்றத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டியுள்ளது. பிப்ரவரி 29-ம் தேதியுடன் paytm payment  வங்கி சேவை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக paytm payment வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும் அவர்களது கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது paytm payment  வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பயனாளர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் எனவும்  இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவித்தது. மேலும் paytm  இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கையை paytm payment வங்கி எதிர்கொண்டுள்ளது. மேலும் இதன் காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட் அல்லது FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது TOPUP போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என தகவல் வெளியானது 

அதனைத்தொடர்ந்து பயனாளர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு, ப்ரீபெய்ட் வாலட், FASTag போன்றவற்றில் உள்ள இருப்புத் தொகையை பெறவும் அல்லது பயன்படுத்தவும் முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்த முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow