இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி...20 வயது வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த ஜோகோவிச்...

Mar 12, 2024 - 16:06
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி...20 வயது வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த ஜோகோவிச்...

டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இத்தாலியின் லூகா நார்டிவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

இண்டியன்வெல்ஸ் ஒபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 12) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இத்தாலியின் 20 வயது வீரரான லூகா நார்டி ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் லூகா நார்டி 6-4, 3-6, 6-3 என்ற செட்கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 20 வயதே ஆன லூகா நார்டியிடம், ஜோகோவிச் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow