இந்திய கிரிக்கெட் வீரர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள் : ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக சுழல் பந்துவீச்சாளர் ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெெற்றி பெற்றார். தற்போது ரிவாபா ஜடேஜா குஜராத் மாநில கல்வி அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் துவாரகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிவாபா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார். ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ ஈடுபட்டது கிடையாது.
அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சிலர் இது போன்ற போதை பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த மாதம் கூட ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில், ரிவாபா ஜடேஜா இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும், சலசலப்பையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
What's Your Reaction?

