திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: திங்கட்கிழமை ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் எந்தத் தூணில் ஏற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, வழக்கை டிசம்பர் 15 (திங்கட்கிழமை) வரை ஒத்திவைத்தது.
மனுதாரர் தரப்பு வாதங்களை அன்று கேட்க முடிவு செய்யப்பட்டது.கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மேலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மனுதாரர்கள் ஒரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை” என்று வாதிட்டார்.
73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், 1994-க்குப் பிறகே இந்த சர்ச்சை தொடங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசு தரப்பும், “தீபம் எங்கு ஏற்றப்பட வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும். தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்று நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லை” என்று வலியுறுத்தியது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் ஆவணங்கள் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த திங்கட்கிழமை தொடரும். மனி நீதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்படாததால் ஏற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு பிரச்சினையும் இதில் இணைந்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றம் இதுவரை தீபம் ஏற்றுவது குறித்து 2014-ல் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தற்போதைய சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தரப்பு வாதம்:
தொடர்ந்து அரசு தரப்பு வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 73 ஆண்டுகலாகவே உச்சி பிள்ளையர் கோயிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதில் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. இது தொடர்பாக முன்னதாக நடைபெற்ற வழக்குகளில் கிடைத்த தீர்ப்புகளும் உள்ளன.
இவற்றை கருத்தில் கொள்ளாமல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூண் அல்ல; அது எல்லை கல்லாக குறிப்பிடப்படுகிறது. என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
What's Your Reaction?

