வரலாற்றில் இல்லாத அளவு மோடி ஆட்சியில் குறைந்த பணவீக்கம் - அமைச்சர் பியூஷ் கோயல்

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் குறைந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Feb 9, 2024 - 17:18
வரலாற்றில் இல்லாத அளவு மோடி ஆட்சியில் குறைந்த பணவீக்கம் - அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதையும் முதலில் முழுவதுமாக கவனித்த பின்பே கருத்து கூறும் குணம் கொண்டவர் பிரதமர் என புகழாரம் சூட்டினார். ஒரு மணி நேரத்தில் 55 நிமிடங்கள் நம்மை பேசவிட்டு விட்டு, தான் உள்வாங்கியதை வைத்து 5 நிமிடங்களில் தீர்வு கூறுபவர் பிரதமர் எனவும் மத்திய அமைச்சர் கூறினார். 

தொடர்ச்சியான மற்றும் விரைவான பணப்புழக்கம் சில நேரங்களில் பொருளாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவுக்கும் எனவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்த சமநிலையை உருவாக்கியதாகவும் அவர் கூறினார். 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தபோது, அதே 40 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் பணவீக்கம் குறைந்ததாகவும் அவர் பேசினார். இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் குறைந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசம் முன்னேற்றப் பாதையில் சென்றது தொடர்பான ஆழமான பல்வேறு தகவல்களை, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த வெள்ளை அறிக்கை வெளிக்கொணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow