அதிமுக இரு அணிகளுக்கும் பொது சின்னத்தை ஒதுக்குங்கள்... தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை...

ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளுக்கும் பொதுச் சின்னத்தை ஒதுக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Mar 18, 2024 - 19:27
Mar 18, 2024 - 20:26
அதிமுக இரு அணிகளுக்கும் பொது சின்னத்தை ஒதுக்குங்கள்... தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை...

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவின் இரு அணிகளுக்கும் பொதுச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செலவம் நீக்கப்பட்டதைத் தொடந்து, கட்சியின் கொடி, சின்னம், பெயர், லெட்டர்பேட் போன்றவற்றை அவர் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு கடந்த ஆண்டு தொடுக்கப்பட்டது. பல மாதங்களாக நடைபெற்ற வழக்கில் இன்று (மார்ச் 18) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஓபிஎஸ் அதிமுக சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அதிமுக கட்சி சார்பில் அதிமுக தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனு படிவங்களில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளுக்கும் பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதிமுக ஓபிஎஸ் அணி என்ற பெயரில் பொதுச் சின்னத்தை ஒதுக்கி, வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 6.12.2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர் செல்வம் துணை ஒருங்கிணைப்பாளராகவும் 5 ஆண்டுகள் இருக்க கட்சி நிர்வாகிகள் மூலம் தேர்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற கட்சியின் பதவிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை அந்த நடைமுறையில் இருப்பதையும், அதற்கான சான்றுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருக்கின்றன என்பதையும் தனது கோரிக்கை மனுவில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow