வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட் 3டி எஸ் செயற்கை கோள்!
வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் இன்சாட் 3டிஎஸ் அதி நவீன செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை, 5:30 மணிக்கு, இன்சாட் 3டிஎஸ் அதி நவீன செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது. ஜிஎஸ்எல்வி - எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு, புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் மூலம் வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து புயல், மழை, வெள்ளத்தை துல்லியாமாக கணிக்கும் உதவும். 2,274 கிலோ எடையுடன் கூடிய இந்த இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன. இன்சாட் செயற்கைகோள் வரிசையில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 3வது செயற்கைகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?