தொழில் முனைவோருக்கு லக்..! சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1,557 கோடி..! தஞ்சையில் ரூ.120 கோடியில் சிப்காட்..!
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ரூ.623 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,557கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு ஆர்ட்ஃபிஷியல் இன்டெலிஜென்ட் மிஷன்" திட்டம் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நீர் வளத்துறையை பொருத்தவரை ரூ.8,398 கோடியும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,557 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,483 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் & உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும் எனவும், ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இலவச WIFI வசதிகள் அமைக்கப்படும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் மாநிலத்தரவு மையம் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,428 கோடியும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த ரூ.12,000 கோடியும், கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ரூ.623 கோடியில் மேம்படுத்தப்படும் எனவும், வரும் நிதியாண்டியில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?