500-வது நாளில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நடிகர் கார்த்தி உணவகம்..

நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக திறக்கப்பட்ட உணவகம், சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக செயல்படாத நிலையில், சனிக்கிழமை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

500-வது நாளில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நடிகர் கார்த்தி உணவகம்..

நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' சாதம் (வெஜிடபிள் பிரியாணி)  வெறும் ரூ.10-க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வந்தது.  சாலை பராமரிப்பு பணிகள் காரணமாகவும்,  போதிய இடவசதி இல்லாததாலும் சில மாதங்களாக செயல்பட முடியாமல் இருந்து வந்த, இந்த உணவகம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது. லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை (17.04.2024) அன்று இந்த உணவகம் தொடங்கி 500-வது நாள் நிறைவடைகிறது. ஊருக்கே உணவு விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow