நாளை விண்ணில் பாய்கிறது 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள்.. கவுண்டவுன் இன்று தொடக்கம்..

இறுதிக்கட்டப் பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (பிப்.16) பகல் 2.05 மணிக்கு தொடங்குகிறது.

Feb 16, 2024 - 09:06
Feb 16, 2024 - 10:20
நாளை விண்ணில் பாய்கிறது 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள்.. கவுண்டவுன் இன்று தொடக்கம்..

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே அறியும் வகையில் ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது.

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.  இதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (பிப்.17) மாலை 5.30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இறுதிக்கட்டப் பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (பிப்.16) பகல் 2.05 மணிக்கு தொடங்குகிறது.

‘இன்சாட்-3டிஎஸ்’செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டின் மொத்த எடை 420 டன்னாகும். 3 நிலைகள் கொண்ட இந்த ராக்கெட்டில் 139 டன் உந்து சக்தியைக் கொண்ட திட உந்து சக்தி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow