10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. இனி 600 மதிப்பெண்கள்...

இந்த நடைமுறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகும் வகையில், தமிழ் கற்றல் சட்டம் 2006-இல் திருத்தம் செய்து அரசாணை

Feb 16, 2024 - 09:20
Feb 16, 2024 - 10:29
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. இனி 600 மதிப்பெண்கள்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 10 வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒரு தொகுப்பை காணலாம்...

10-ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது வரை பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே மாணவர்கள் உயர்க்கல்விக்கு செல்கின்றனர். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரையிலாவது தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும், தேர்வெழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு நான்காவது பாடமாக விருப்பப் பாடம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. தமிழ் அல்லாத பிற சிறுபான்மை மொழிகளை கொண்ட மாணவர்கள் விருப்ப பாடத்தை எழுதினாலும்  அதில் பெற்ற மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில், சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதிப்பெண் பட்டியலில் தங்களுடைய மொழிக்கான பாடத்தில் உரிய மதிப்பெண் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. உரிய தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக அந்த பாடங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் விருப்ப பாடத்தையும் தேர்ச்சிக்குரிய ஒரு பாடமாக கணக்கில் எடுத்துக்கொள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதனைப் பின்பற்றியே தற்போது பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 2024-25 கல்வியாண்டில் இருந்து விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்கும் சேர்த்து 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. விருப்ப பாடத்திற்கும் 35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow