நாகை மாவட்டம்: 44 பேர் குண்டர் சட்டத்தில் கைது - மாவட்ட எஸ்.பி தகவல்
நாகை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 44 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி ஹர்ஷ்சிங் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட போலீஸ் எஸ்.பி ஹர்ஷ்சிங் கூறியதாவது, நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2023)44 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 116 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 695 கிலோ 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 899 பேர் சாராய விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 115 பேர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட1763 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 474 பேர் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுள்ளனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கட்த்தியது தொடர்பாக 13 டிராக்டர்கள், 3 பொக்லின் எந்திரங்கள், தலா ஒரு டிப்பர் லாரி, மினி வேன் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி வாகனங்கள் இயக்கியது தொடர்பாக 67,283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதன் மூலம் ரூ.63 இலட்சத்து 65,600 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
விபச்சார வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியை கண்காணிக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கடலோர காவல் குழும போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகனங்களில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிபவர்களை பார்த்தால் அருகில் உள்ள போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.” என்று அவர் கூறினார்.
What's Your Reaction?