வாட்ஸ்-அப்பில் புதிய வசதி : இனி நோட்டிஃபிகேஷன் மூலம் ப்ளாக் செய்யலாம்
மெசேஜை திறந்து பார்க்காமல் நோட்டிஃபிகேஷன் மூலம் ப்ளாக் செய்யும் வசதியை வாட்ஸ்-அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
சமூக தளங்களில் ஒன்றான வாட்ஸ-அப் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் நமக்கு வரும் மெசேஜை திறந்து கூட பார்க்காமல் நமக்கு தேவையில்லை எனில் நோட்டிஃபிகேஷன் மூலம் ப்ளாக் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்-அப் பயனர்களுக்கு ஏராளமான தேவையில்லாத செய்திகள் வருகிறது எனவும் விளம்பர செய்திகள் அதிகரிப்பது அவதியாக இருக்கிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சில மோசடி விளம்பர செய்திகளுக்கான லிங்க் அனுப்பப்படுகிறது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நமக்கு இதுவரையில் வரும் மெசேஜை திறந்து படித்துவிட்டு அதன்பின்னரே அதனை ப்ளாக் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த செய்தியை திறந்துகூட பார்க்காமல் நோட்டிஃபிகேஷன் மூலம் ப்ளாக் செய்யும் வசதியை வாட்ஸ்-அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதனால் தேவையில்லாத செய்தியை பயனர்கள் எளிதாக தவிர்க்க முடியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வசதியால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?