அதிமுக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9 முதல் நேர்காணல்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 9-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9 முதல் நேர்காணல்
Interviews with those who have submitted their applications to contest AIADMK from January 9

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக சார்பில் பெறப்பட்டது. டிச 15-ம் தேதி தொடங்கி, டிச 31-ம் தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. சுமார் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். 

இந்நிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி 9-ம் தேதி கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கும். 

10-ம் தேதி கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை.

11-ம் தேதி கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, 

12-ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் 

13-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்சென்னை, புதுச்சேரி,கேரளா, வடசென்னை, சென்னை புறநகர்   ஆகிய மாவட்டங்களுக்கு  நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow