அதிமுக தேர்தல் அறிக்கை குழு 7-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்
2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அமைத்திருந்தார். இந்த குழு தமிழகம் முழுவதும் 7-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2026 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான சுற்றுப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முழுவதும், வருகின்ற 7.1.2026 முதல் 20.1.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.7.1.2026 புதன் கிழமை காலை 10 மணி வேலூர் மண்டலம் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, மாலை 4 மணி சேலம் மண்டலம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி
8.1.2026 வியாழக் கிழமை காலை 9 மணி விழுப்புரம் மண்டலம் விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி, மாலை 4 மணி திருச்சி மண்டலம் திருச்சி பெரம்பலூர் அரியலூர் கரூர் புதுக்கோட்டை, 9.1.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணி தஞ்சாவூர் மண்டலம் தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை, மாலை 4 மணி சிவகங்கை மண்டலம் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம்
என 20-ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிய உள்ளதாக. அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?

