அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்?... ஆப்கான், ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி!

ஒருவேளை ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் சேஸ் செய்து வெற்றி பெறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான், 160 என்ற வெற்றி இலக்கை 15.4 ஓவர்களில் எட்டி வெற்றிபெற வேண்டும்

Jun 23, 2024 - 13:18
அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்?... ஆப்கான், ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி!
அரையிறுதி

ஆன்டிகுவா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி, குரூப் 1 பிரிவில் சூப்பர் 8 சுற்றில் சிக்கலான நிலைமையை உருவாக்கியுள்ளது. எந்தெந்த அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போம் 

ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுடைய அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால், குரூப் 1 பிரிவில் மூன்று அணிகள் 4 புள்ளிகள் உடன் நிற்கும் நிலை ஏற்படும். ஒருவேளை, ஆஸ்திரேலியா தனது அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தி வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான், தனது அடுத்த போட்டியில் வங்கதேசத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியாக வேண்டும். 

அப்போது தான் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் சேஸ் செய்து வெற்றி பெறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான், 160 என்ற வெற்றி இலக்கை 15.4 ஓவர்களில் எட்டி வெற்றிபெற வேண்டும். இந்திய அணியின் நெட் ரன் ரேட் 2.425 ஆக உள்ளது. இந்திய அணியை வெளியேற்றுவதற்கு, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டும். 

இந்தியாவும் வங்கதேசமும் தங்களுடைய அடுத்த போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், இந்திய 6 புள்ளிகள் உடன் குரூப் 1 சுற்றில் முதலிடத்தைப் பிடிக்கும். மற்ற மூன்று அணிகளும் சரிசமமான புள்ளிகள் உடன் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்று முடிவுசெய்யப்படும். 

தற்போது ஆஸ்திரேலிய அணியின் நெட் ரன் ரேட் 0.223 ஆக உள்ளது.  வங்கதேசம் தனது அடுத்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, நெட் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ள முடியும். அதே நேரம், ஆஸ்திரேலிய அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் மட்டுமே, வங்கதேசத்தால் இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆஸ்திரேலியாவும் வங்கதேசமும் தங்களுடைய அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் வெற்றிபெற்றால்,  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதிபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow