ஐபிஎல் மினி ஏலம் : காங்கிரஸ் எம்பி மகனை எடுத்த கொல்கத்தா அணி 

பிகார் எம்பியின் மகனும் டில்லி வீரருமான சர்தக் ரஞ்சனை கொல்கத்தா அணி நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எடுத்ததுள்ளது. 

ஐபிஎல் மினி ஏலம் : காங்கிரஸ் எம்பி மகனை எடுத்த கொல்கத்தா அணி 
Kolkata team picks Congress MP's son

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.  ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா அணி அதிகபட்ச தொகையான ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

மற்ற அணிகளைவிட அதிகபட்சத் தொகையுடன் ஏலத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி, இந்த ஏலத்தில் மொத்தமாக 13 பேரை எடுத்தது.ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்தக் ரஞ்சன், பிகாரின் பூர்ணியா எம்பியும், காங்கிர்ஸ் மூத்த தலைவருமான பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் மகன்.

உள்நாட்டுப் போட்டிகளில் டில்லி அணிக்காக விளையாடி வரும் சர்தக் ரஞ்சன், இரண்டு முதல் தரப் போட்டிகள், 4 லிஸ்ட் ஏ போட்டிகள், 5 டி20 போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக பப்பு யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில், “வாழ்த்துகள், மகனே! உன் திறமையால் உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு. உன் ஆசைகளை நிறைவேற்று! இனி சர்தக் என்ற பெயரில் எங்கள் அடையாளம் உருவாகும்” எனக் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow