டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்சர்கள் - ஜெய்ஸ்வால் முதலிடம் 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய இளம்வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்த்தினைப் பிடித்துள்ளார்.

Oct 2, 2024 - 17:31
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்சர்கள் - ஜெய்ஸ்வால் முதலிடம் 
jaiswal

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்தியா மகத்தான வெற்றி பெற்று இத்தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்திய வீரர்கள் பலரும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இவர் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சேர்த்து நான்கு இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் அவற்றில் மூன்று இன்னிங்ஸில் அரை சதம் விலாசியிருக்கிறார். 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவற்றுள் 20 இன்னிங்ஸில் 7 அரைசதம், 3 சதம், 2 இரட்டைசதம் என தன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் 700க்கும் அதிகமான ரன்கள் எடுத்து அனைவரையும் மிரள வைத்த சாகசக்காரனாய் திகழ்ந்தார். 

ஜெய்ஸ்வால் இதுவரையிலான தனது ஆட்டங்களில் 32 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 2014ம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் இந்த சாதனையை முறியடிக்க ஒரு சிக்ஸர்கள் அடித்தால் போதும். வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அவர் அச்சாதனையை அவர் நிச்சயம் நிகழ்த்துவார்.


2023-2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 32 சிக்ஸர்கள் (இந்தியா)

பென் ஸ்டோக்ஸ்-22 சிக்ஸர்கள்(இங்கிலாந்து)

கமிந்து மெண்டிஸ் -19 சிக்ஸர்கள்(இலங்கை)

ரோகித் சர்மா-17 சிக்ஸர்கள்(இந்தியா)

சுப்மன் கில்-16 சிக்ஸர்கள்(இந்தியா)

கிளென் பிலிப்ஸ்-16 சிக்ஸர்கள்(நியூசிலாந்து)

ஒரு ஆண்டில் அதிக சிஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். அவர் இந்த ஆண்டில் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 26 சிக்ஸர்கள் அடித்த பென் ஸ்டோக்ஸின் சாதனையை முறியடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். 

டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

பிரண்டன் மெக்கல்லம் -33 சிக்ஸர்கள் (2014)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் -28* சிக்ஸர்கள்(2024)

பென் ஸ்டோக்ஸ் -26 சிக்ஸர்கள்(2022)

ஆடம் கில்கிறிஸ்ட் -22 சிக்ஸர்கள்(2005)

வீரேந்திர சேவாக் -22 சிக்ஸர்கள்(2008)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow