'ஜெய்ஸ்வாலை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' - முன்னாள் வீரர் நசீர் ஹூசைன்

Feb 20, 2024 - 15:13
Feb 20, 2024 - 16:11
'ஜெய்ஸ்வாலை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' - முன்னாள் வீரர் நசீர் ஹூசைன்

ஜெய்ஸ்வால் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளவில்லை; நீங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் டக்கெட் மட்டும் 139 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் அரைச்சதத்தை கூட எட்டவில்லை. இதனையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்தது. அவர் 214 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 434 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

<blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">&quot;Yashasvi Jaiswal hasn&#39;t learned from you, he&#39;s learnt from his upbringing. If anything you should look at him and learn&quot;.<br><br>What a reply by Nasser Hussain to Ben Duckett...!!!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow