கம்பீரை  தொடர்ந்து நடையை கட்டிய ஜெயந்த் சின்ஹா...பாஜகவில் தொடரும் விலகல் சம்பவங்கள்

Mar 2, 2024 - 21:02
கம்பீரை  தொடர்ந்து நடையை கட்டிய ஜெயந்த் சின்ஹா...பாஜகவில் தொடரும் விலகல் சம்பவங்கள்

கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் எம்.பி. ஜெயந்த் சின்ஹாவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிடும் பணியில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் கௌதம் கம்பீருக்கு சீட் வழங்கப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக கம்பீர் அறிவித்தார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், தனது அரசியல் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன், மக்களுக்குச் சேவை செய்ய தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா, வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தன்னை விடுவிக்குமாறு ஜெ.பி.நட்டாவை கேட்டுக் கொள்வதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரம் மற்றும் நிர்வாக விவகாரங்களில் நிச்சயமாக கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow