"ராகுல் ஸ்டைலில் பொன்முடி வருவார்...!" சபாநாயகர் அப்பாவு சூசகம்..!
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏவாக செயல்பட வாய்ப்புள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் மீண்டும் எம்.எல்.ஏவாக தொடர வாய்ப்புள்ளதாகவும், அதற்கான சட்டநடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் பொன்முடியை குற்றவாளி எனக்கூறி உயர்நீதிமன்றம், அவருக்கும் அவரது மனைவிக்கும் 3ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்தாண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால் திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்து வந்த பொன்முடியின் பதவி பறிபோனது. இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் திருக்கோவிலூரும் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பொன்முடி வழக்கில் தண்டனையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளதை குறிப்பிட்டார். அத்துடன் ராகுல்காந்தி வழக்கில் எப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின் அவர் மீண்டும் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டாரோ அதேபோல இந்த விவகாரத்திலும் நடக்கும் என்றும், அதற்கு முன்னதாக அதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தா
What's Your Reaction?