மீண்டும் சூடு பிடிக்கும் தளபதி 69 இயக்குநர் ரேஸ்... விஜய்யின் லிஸ்ட்டில் அந்த ஹீரோவா..?

விஜய்யின் தளபதி 69 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகும் தளபதி 69 பொலிட்டிக்கல் ஜானரில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Feb 29, 2024 - 17:39
மீண்டும் சூடு பிடிக்கும் தளபதி 69 இயக்குநர் ரேஸ்... விஜய்யின் லிஸ்ட்டில் அந்த ஹீரோவா..?

விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். தளபதி 69 என்ற டைட்டிலில் உருவாகும் இதுதான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் அரசியலில் களமிறங்கவிருப்பதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் தளபதி 69 மட்டும் இல்லாமல், மேலும் ஒரு படத்திலும் விஜய் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்பு முடிந்ததும் தான் தளபதி 69 இயக்குநர் பற்றி அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்த லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர், வெற்றிமாறன், த்ரிவிக்ரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இவர்களுடன் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநரான ஹெச் வினோத்தின் பெயரும் அதிகமாக வைரலாகின. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் வெற்றிமாறன் தான் தளபதி 69 இயக்குநராக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது ஹெச் வினோத் அல்லது ஆர்ஜே பாலாஜி தான் தளபதி 69 படத்தை இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள ஆர்ஜே பாலாஜி, காமெடி படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன்னர் விஜய்யை சந்தித்து ஒரு பொலிட்டிக்கல் ஜானர் கதையை கூறியதாக தெரிவித்துள்ளார். அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் விரைவில் தனது முடிவை சொல்வதாகவும் ஆர்ஜே பாலாஜிக்கு பதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் இந்த தகவல் தீயாகப் பரவி விஜய் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. அட்லீ, நெல்சன், லோகேஷ் என விஜய்யின் அன்புத் தம்பிகள் தளபதி 69 படத்தை இயக்குவதற்காக காத்திருக்கின்றனர். ஆனால், விஜய்யோ ஆர்ஜே பாலாஜி சொன்ன கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் விஜய்யின் தளபதி 69 இயக்குநராக ஆர்ஜே பாலாஜி கமிட்டாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow