Kalki 2898 AD Review: 2000 கோடி வசூலிக்குமா..? பிரபாஸின் கல்கி 2898 AD விமர்சனம் இதோ!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நெட்டிசன்களின் டிவிட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Jun 27, 2024 - 11:03
Kalki 2898 AD Review: 2000 கோடி வசூலிக்குமா..? பிரபாஸின் கல்கி 2898 AD விமர்சனம் இதோ!

சென்னை: சலார் வெற்றியைத் தொடர்ந்து கல்கி 2898 AD திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபாஸ். 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் பான் இந்தியா படமாக ரிலீஸான கல்கி 2898 AD, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டும் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், இன்று ரிலீஸான கல்கி 2898 AD படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உட்பட இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், கல்கி 2898 AD படத்தின் FDFS பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அதன்படி, வெங்கி ரிவீவ்ஸ் கல்கி 2898 AD படத்திற்கு 3 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்திய சினிமாவில் கல்கி 2898 AD மிகப் பெரிய சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. விஷுவலாக இப்படத்தை தரமாக இயக்கியுள்ளார் நாக் அஷ்வின். அதேபோல், எமோஷனலாக பல காட்சிகள் வைத்துள்ள நாக் அஸ்வின், திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பிவிட்டதாக விமர்சித்துள்ளது. படத்தில் கிளைமேக்ஸ் சீன் மட்டுமே ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுப்பதாகவும், விஷுவல், மேக்கிங் ஆகியவற்றின் தியேட்டர் அனுபவத்திற்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம் எனவும் வெங்கி ரிவீவ்ஸ் விமர்சனம் செய்துள்ளது. 
 
அதேபோல், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் லக்ஷ்மி காந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் கல்கி 2898 AD படத்திற்கு கலவையான விமர்சனம் செய்துள்ளார். Sci-fi Mythological Entertainer மூவியாக உருவாகியுள்ள கல்கி 2898 AD மேக்கிங் சிறப்பாக வந்துள்ளது. பிரபாஸ், புஜ்ஜி கார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வரும் சீன் கலகலப்பாக இருப்பதாகவும், கமல், அமிதாப் பச்சன் இருவரின் என்ட்ரியும் தாறுமாறு எனவும் பாராட்டியுள்ளார். கல்கி 2898 AD கதைகளத்தை தான் நினைத்தப்படி உருவாக்கியுள்ள இயக்குநர் நாக் அஷ்வின், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என விமர்சித்துள்ளார். அதேபோல், பல நடிகர்கள் கேமியோவாக நடித்துள்ளனர், அது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருப்பதாகவும், ஆனால், தீபிகா படுகோன் போர்ஷன் கொஞ்சம் போர் அடிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக வந்துள்ளது, நாக் அஷ்வின் காட்டியுள்ள கற்பனையான உலகம், இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத ஒன்று எனவும் பாராட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தப் படம் நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் எனக் கூறியதோடு, 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். 

சோஷியல் மீடியா ட்ராக்கரும் சினிமா விமர்சகருமான அமுதபாரதி கல்கி படத்துக்கு 3.25 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ஓக்கே ரகம் என்றுள்ள அவர், ஹீரோக்களின் இன்ட்ரோ சீன்ஸ், இடைவேளை காட்சிகள் சூப்பர் எனவும், கிளைமேக்ஸ் இரண்டாவது பாகம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பதாகவும் கூறியுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோரின் கேரக்டர் தரமாக இருப்பதாகவும், திஷா பதானி வேஸ்ட் என்றும் விமர்சித்துள்ளார். அதேபோல், கேமியோ கேரக்டர்கள் நன்றாக இருந்தாலும், படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றுள்ளார். சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் ஓக்கே ரகம் தான், ஒரே இசையை பல இடங்களில் ரிப்பீட்டடாக பயன்படுத்திருப்பது ரசிக்க முடியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். விஷுவல், மேக்கிங் நன்றாக இருந்தாலும், கல்கி 2898 AD ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் எனக் கூறியுள்ளார். 

ஒட்டுமொத்தமாக கல்கி 2898 AD படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. பிரபாஸ் ரசிகர்களோ இந்தப் படம் 2000 கோடி வரை வசூலிக்கும் என சவால் விட்டு வருகின்றனர். ஆனால், முதல் வாரம் மட்டுமே கல்கி 2898 AD படத்துக்கு தரமான கலெக்ஷன் இருக்கும் எனவும், அதற்கு மேல் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow