Kalki 2898 AD: கல்கி பிரபாஸுடன் இணைந்த காந்தாரா ரிஷப் ஷெட்டி... புஜ்ஜியுடன் தொடங்கிய கொண்டாட்டம்!
பிரபாஸின் கல்கி 2898 AD ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
உடுப்பி: பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD திரைப்படம், வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை, நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள கல்கி ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிரபாஸ், கமல், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர். அதேபோல், கல்கி ப்ரோமோஷனில் பல டாப் ஹீரோக்களும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்த லிஸ்ட்டில் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியும் இணைந்துள்ளார். 2022ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும், இதில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி, பான் இந்தியா அளவில் பிரபலமானார். அவர் தற்போது கல்கி 2898 AD படத்தில் பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி வாகனத்தை ஓட்டி வைப் கொடுத்துள்ளார். அதாவது கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் கேரக்டருக்காக ஸ்பெஷலாக ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது படக்குழு. அதற்கு புஜ்ஜி எனவும் பெயர் வைத்துள்ள படக்குழு, கல்கி ப்ரோமோஷனுக்கும் அந்த காரின் மாடல்களை பயன்படுத்துகிறது. இந்நிலையில், கல்கி x காந்தாரா எனும் டேக் உடன், புஜ்ஜி காரை ஓட்டிய வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
மேலும், கல்கி டீசரில் புஜ்ஜி வரும் சீன்கள் தரமாக இருந்தன, அதன் மூலம் இப்படத்தில் புஜ்ஜியின் மிரட்டல் எப்படி இருக்கும் என தெரிந்துகொண்டேன். இப்போது டெஸ்ட் ட்ரைவ் செய்ததில் புதிய அனுபவம் கிடைத்தது. பைரவாவிற்கும் புஜ்ஜிக்கும் ஆல் தி பெஸ்ட் எனக் கூறியுள்ளார். கல்கி ப்ரோமோஷனில் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியின் என்ட்ரி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜியை ட்ரைவ் செய்து கல்கி படத்துக்கு ப்ரோமோஷன் செய்திருந்தார்.
பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஹீரோவாக மாஸ் காட்டி வரும் பிரபாஸ் நடிப்பில், கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகியிருந்தது. சலார் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கும் நினைப்பில் கல்கி படத்தை அதிகம் நம்பியிருக்கிறார் பிரபாஸ். ஆனால், இப்படத்தின் ட்ரைலர் கார்ட்டூன் மூவி மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். பிரம்மாண்டமான மேக்கிங்கை மட்டும் நம்பி பிரபாஸ் கல்கி படத்தில் நடித்துவிட்டார் எனவும், இது ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?