"அறிவாலய கொத்தடிமை கமல்ஹாசன்" - போட்டுத் தாக்கிய வைகைச்செல்வன்...

Apr 9, 2024 - 09:03
"அறிவாலய கொத்தடிமை கமல்ஹாசன்" - போட்டுத் தாக்கிய வைகைச்செல்வன்...

டார்ச் லைட்டில் பேட்டரி இல்லாமல் அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கொத்தடிமையாகக் கிடப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் தஞ்சை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கிவிடக்கூடாது. சங் பரிவார் அமைப்புகள், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்த மண்ணில் தலைதூக்கிவிட்டால் தீவிரவாதம் வளர்ந்துவிடும். சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுவார்கள். அடவாடித்தனம் தலைவிரித்து ஆடும், எனவே பாஜக-விற்கு மறந்தும் வாக்களித்து விடாதீர்கள்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், வயதான காலத்தில் ஓய்வு எடுக்காமல் ஒபிஎஸ் பலா பழத்தை சுமந்து கொண்டு தட்டு தடுமாறி வாக்கு சேகரித்து கொண்டு இருப்பதாக கிண்டலடித்தார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கல்ஹாசன் குறித்துப் பேசும் போது, “எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நான் விஸ்வரூபம்எடுப்பேன் என்று சொல்கிறார். நீங்கள் விஸ்வரூபம் எடுத்தாலும் சரி பாபநாசம் படம் எடுத்தாலும் சரி உங்கள் படம் இனிமேல் ஓடாது. விஸ்வரூபமும், பாபநாசமும் எடுத்த கமலஹாசன், டார்ச் லைட்டில் பேட்டரி இல்லாமல் அறிவாலயத்தில் கொத்தடிமையாக கிடக்கிறார்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow