தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்குசேகரிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - உதயநிதி

Udhayanidhi

Apr 9, 2024 - 08:49
தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்குசேகரிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - உதயநிதி

மக்களவை தொகுதியில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நிதிநெருக்கடி ஏற்பட்டபோதிலும், அதனை முறையாக கையாண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக அரசு என தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதிகளான மகளிர் இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என பெருமிதத்துடன் அவர் கூறினார்.

காலை உணவு திட்டத்தின் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக கூறிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன்பெற்று வருவதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, போன்ற மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது உரிய உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை என குற்றம்சாட்டினார். அதிகளவில் GST வரி கட்டினால் கூட தமிழகத்திற்கு குறைந்தளவே  பணம் திருப்பி வழங்கபடுவதாக கூறினார். 

இதனால் திட்டங்கள் அதிகளவில் கொண்டு வர முடியவில்லை என சாடினார். எனவே மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மேலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்கு பெற நினைப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow