அதிமுகவுடன் தவெக கூட்டணியா? ”விஜய் ஒரு எம்.ஜி.ஆர்”… புகழேந்தி பேட்டி!

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அரசியலில் இருந்து விஜய் காணாமல் போய்விடுவார் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். 

Sep 23, 2024 - 19:57
அதிமுகவுடன் தவெக கூட்டணியா? ”விஜய் ஒரு எம்.ஜி.ஆர்”… புகழேந்தி பேட்டி!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “வைத்திலிங்கம் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ன குற்றம் சாட்டப்பட்டாலும் அந்த வழக்கு சந்திக்க வேண்டும் என ஏற்கனவே அம்மா கூறியுள்ளார். அதை நிரூபிக்க வேண்டும் யார் மீது லஞ்சம் குற்றச்சாட்டு வருகிறது அவர்கள் அதை நிரூபித்தாக வேண்டும். பன்னீர்செல்வம் அதைத்தான் கூறியுள்ளார். என்னுடைய பணிவான வேண்டுகோள் திமுக அரசு இந்த இரண்டு  வழக்குகளையும் குற்ற பத்திரிக்கை உடன் நிறுத்தி விடக்கூடாது மேலும் தொடர வேண்டும். ஏகப்பட்ட எப் ஐ ஆர் போட வேண்டியுள்ளது. ஆகவே முதலமைச்சர் இத்துடன் நிறுத்தி விடக்கூடாது அனைத்து வழக்குகளையும் நிலுவையில் வைத்துவிட்டு இரண்டு எஃப்ஐஆர் மட்டும் போடப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்ந்து பேசிய புகழேந்தி, “1996 ஆம் ஆண்டு பூஜை செய்து கொண்டிருந்த அம்மாவை ஒரு பழைய வேனில் ஏற்றி அங்கிருந்து கொண்டு போய் நீதிபதியின் வீட்டில் கொண்டு நிறுத்தி லிப்டை ஆப் செய்து வேர்த்து விறு விறுத்து மேலே ஏறி நீதிபதி முன் நிறுத்தினார்கள். பழனிச்சாமி திமுக இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொடநாடு வழக்கில் தெளிவாக பதினாறு பேர் மீது விசாரணை செய்யப்பட்டது. ஒரு நபர் மீது மட்டும் விசாரணை நடத்தப்படவில்லை அந்த ஒருவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்த நிலைமையில் இருக்கும்  அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்யும் காணாமல் சென்று விடுவார். விஜய் இவர்களுடன் வர மாட்டார் கவலைப்பட வேண்டாம். விஜய்  எம்ஜிஆர் போல் போய்க் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் வரலாறு.. அவர் போன்று மறுபடி உருவாக்க முடியுமா என்பது தெரியாது. இப்போது இருக்கும் அதிமுகவுடன் இணைந்தால் ஒன்றும் வேலைக்காவாது. அவருடைய நிலைமையில் உறுதியாக நின்றால்தான் வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow