கரூர் சம்பவம்:சிபிஐ வசம் விஜய் பிரச்சார வாகனம்: டிரைவரிடம் துருவி துருவி விசாரணை 

கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பிரச்சார வாகனம் மற்றும் ஓட்டுனர் சிபிஐ அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி உள்ளனர்.

கரூர் சம்பவம்:சிபிஐ வசம் விஜய் பிரச்சார வாகனம்: டிரைவரிடம் துருவி துருவி விசாரணை 

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள்,  தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் என பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் 

வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் சிபிஜ  அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் சிபிஜ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பிரச்சார வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தற்பொழுது நேரில் ஆஜராகி உள்ளனர். 

சிபிஐ அதிகாரிகள் ஓட்டுநரிடம் பிரச்சாரம் மேற்கொண்ட நேரம் இந்த இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது எப்பொழுது பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தை எப்போது முடித்தார். அவர் எப்பொழுது கிளம்பிச் சென்றனர்  என்பது குறித்த பல்வேறு கேள்விகள் சிபிஐ அதிகாரிகள் கேட்கலாம் என கூறப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow