உதயநிதி செங்கல்லை பத்திரமாக வச்சுக்கோ.. அவர்களுக்கு சமாதி கட்டணும்".. சீமான் கடும் தாக்கு !

கள் தீங்கு என்றால் பீர், குவாட்டர், ஜிம், ரம் போன்ற சரக்குகள் எல்லாம் கோவிலில் கொடுக்கும் தீர்த்தமா என கேள்வி எழுப்பிய சீமான்

Apr 9, 2024 - 16:50
Apr 9, 2024 - 16:58
உதயநிதி செங்கல்லை பத்திரமாக வச்சுக்கோ.. அவர்களுக்கு சமாதி கட்டணும்".. சீமான் கடும் தாக்கு !

பெருந்துறையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சீமான்,  தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டு, டாஸ்மாக் மூலம் அரசு கொள்ளை லாபம் பார்க்கிறது என குற்றம்சாட்டினார். உதயநிதி வைத்துக்கொண்டு சுற்றும் செங்கல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளும் படி கூறிய சீமான், அதில் சாராயத்தால் நாட்டை கெடுத்தவர்கள் அத்தனை பேருக்கும் சமாதி கட்டி சிலை வைக்கணும் 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்தார். 

அப்போது  உரையாற்றிய அவர், காவேரி மூலம் 450டிஎம்சி பெற்றுக்கொண்டு இருந்த தமிழகம், 150டிஎம்சி தண்ணீருக்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமை உள்ளது என்றார்.  தமிழகத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி, மின்சாரம், மீத்தேன், ஈத்தேன் ஆகியவை நாட்டுக்கே பொது ஆனால் ஆபத்து மட்டும் நமக்கா ? என கேள்வி எழுப்பினார். தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழகத்தில் விடுமுறை ஆனால் தமிழ் வருட பிறப்புக்கு எந்த மாநிலத்தில் விடுமுறை உள்ளது எனக்கூறியவர், இது திராவிட அரசின் அவலம் என விமர்சித்தார். 

தமிழகத்தில் குடிக்க போகும் போது வாகனம் ஓட்டிச் செல்லலாம் ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. இதனால் மதுப் பிரியர்கள் கோரும்படி ஆவின் பால் வீடு தோறும் விநியோகம் செய்வது போன்று, மதுவை விநியோகம் செய்து விட்டு போக வேண்டிய தானே என பேசினார். 

எல்லையில் நமது மாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தால் இழப்பீடு இல்லை, ஆனால் சாராயம் குடித்து இறந்தால் 10லட்சம் ரூபாய் இழப்பீடு ஏனென்றால், சாராய ஆலையை நடத்துவது அரசின் ஆளு என சீமான் சாடினார். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு இன்னும் நீக்காததற்கு காரணம் மதுக்கடைகளுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றார். 
 
கள் தீங்கு என்றால் பீர், குவாட்டர், ஜிம், ரம் போன்ற சரக்குகள் எல்லாம் கோவிலில் கொடுக்கும் தீர்த்தமா என கேள்வி எழுப்பிய சீமான், மது விற்பனை செய்த காசில் தாலிக்கு தங்கம் என்று கொடுப்பது படுகொலைக்கு சமம் என விமர்சித்தார். 

மது விற்று வரும் வருமானம், தொழு நோயாளி கையில் உள்ள வெண்ணெய்க்கு சமம் என்று அண்ணா சொன்ன நிலையில், திமுக அதிமுக தொழு நோயாளி கையில் உள்ள வெண்ணெயை தான் பல வருடங்களாக நக்கி கொண்டு வருகிறார்கள் என கடுமையாக தாக்கி பேசினார். அத்துடன் தெருவுக்கு தெரு பள்ளி திறந்தவர் காமராஜர் ஆனால் தெருவுக்கு தெரு மது கடைகளை திறந்தவர் கலைஞர் கருணாநிதி என சாடினார். 

மேலும், உதயநிதி வைத்துக்கொண்டு சுற்றும் செங்கல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளும் படி கூறிய சீமான், அதில் சாராயத்தால் நாட்டை கெடுத்தவர்கள் அத்தனை பேருக்கும் சமாதி கட்டி சிலை வைக்கணும் என உரக்க பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow