எம்ஜிஆர் நினைவிடத்தில் மோதி கொண்ட பாஜக - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
எம்ஜிஆர் நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அதிமுகவினரால் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவதற்காக அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் காலை 12 மணியில் இருந்து காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எம்ஜிஆருக்கு நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பன்னீர்செல்வத்திற்காக அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த ரோஜாக்களை எடுத்து தமிழிசை தூவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு காத்து கொண்டிருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்த பாஜக இங்கே எதற்கு வந்தீர்கள் என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலா அஞ்சலி
மறைந்த ஜெயலலிதா தோழி சசிகலா மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவரை வரவேற்க நின்று கொண்டிருந்த கோவில்பட்டியை சேர்ந்த வேலுசாமி என்ற மாற்றுதிறனாளியை அழைத்து சசிகலா பேசினார்.
அப்போது எந்த உதவி தேவை என்றாலும் தன்னை தொடர்பு கொண்டு கேட்குமாறு சசிகலா வேலுசாமியிடம் அறிவுறுத்தினர். உதவியாளர் செல் போன் எண்ணை கொடுத்து அவரிடம் பேசுமாறும் சசிகலா வேலுசாமியிடம் கூறிவிட்டு கிளம்பி சென்றார்.
What's Your Reaction?

