கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை கவரும் ஊதா பூக்கள்...!
பூவே செம்பூவே உன் வாசம் வரும்… வாசல் என் வாசல் உன் பூங்காவனம்… என்ற பாடலில் வரும் வரிகளைப் போல கொடைக்கானல் வாசல்களில் பூத்து குளுங்கும் ஜிகரண்டா பூக்களின் வாசம் மட்டுமல்ல, அதன் அழகும் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது.

கோடை காலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோரங்களில் பூத்துக்குலுங்குபவை தான் இந்த ஜிகரெண்டா பூக்கள்...
ஊத காற்றில் மோதா பூ போல, கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூத்துக்குலுங்கியுள்ளன இந்த பூக்கள்.
மலை சாலைகளில் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரண்டா மலர்கள் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்க கூடியவை. சாலையோரம் செல்வோர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த ஜிகரெண்டா பூக்கள் பூக்கும் மரங்கள் இருக்கும் பகுதி தான் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வரின் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.
What's Your Reaction?