சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்... பேரிகார்டு மீது ஏறிய பெண்கள்...

புதுச்சேரியில் காவல்துறையினரின் துணையுடன் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு.

Mar 9, 2024 - 19:30
சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்... பேரிகார்டு மீது ஏறிய பெண்கள்...

புதுச்சேரியில் சிறுமி படுகொலையை கண்டித்து சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் இளைஞர், மாணவர்கள் அமைப்பினர் சட்டப்பேரவையை நோக்கி  கண்டன பேரணி நடத்தினர். 

அப்போது போலீசார் அமைத்திருந்த பேரிகார்டுகள் மீது இளைஞர்களும், மாணவர்களும் ஏறி குதித்து சட்டசபை நோக்கி முன்னேற முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

புதுச்சேரியில் காவல்துறையினரின் துணையுடன் கஞ்சா விற்பனை நடைபெறுவதால், நகரில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இக் கொடூரத்துக்கு முக்கிய காரணமான கஞ்சாவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow