பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு... வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட என்.ஐ.ஏ, குற்றவாளியை பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியிருக்கிறது.

Mar 9, 2024 - 20:14
பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு... வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட என்.ஐ.ஏ, குற்றவாளியை பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியிருக்கிறது.

கடந்த 1-ம் தேதி பெங்களுரூவில் பரபரப்பான சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தி வருகின்றன. என்.ஐ.ஏ விசாரணை நடத்தியதில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், தற்போது இரண்டு சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, குற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. 

<blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/tIdMZimH6R">pic.twitter.com/tIdMZimH6R</a></p>&mdash; NIA India (@NIA_India) <a href="https://twitter.com/NIA_India/status/1766102926131376589?ref_src=twsrc%5Etfw">March 8, 2024</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மாநகரப் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில், வெடிகுண்டு வைத்த நபர் தனது அடையாளத்தை மறைக்கவும், புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த அடிக்கடி தனது ஆடைகளை மாற்றி வெளியே வந்த காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட என்.ஐ.ஏ, குற்றவாளி குறித்த தகவல் தெரிந்தால் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow