தஞ்சை தொகுதியை தலைகீழாக மாற்ற 63 வாக்குறுதி.. பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தேர்தல் அறிக்கை

Apr 13, 2024 - 14:44
தஞ்சை தொகுதியை தலைகீழாக மாற்ற 63 வாக்குறுதி.. பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தேர்தல் அறிக்கை

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் நிறைந்த தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முரரொலி, அதிமுக சார்பில் தேமுதிகவை சேர்ந்த சிவநேசன், பாஜக சார்பில் கருப்பு எம்.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹுமாயூன் கபீர் ஆகியோருக்கிடையே 4 முனை போட்டி நிலவி வருகிறது. 

இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் தஞ்சை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்படும். தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள்,  நவோதயா பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம் நிறுவப்படும். பட்டுக்கோட்டை தஞ்சாவூர், அரியலூர், தஞ்சாவூர் இடையில் மக்களை பாதிக்காதவாறு இடம் தேர்வு செய்யப்பட்டு ரயில்வே பாதை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பட 63 தேர்தல் வாக்குறுதிகளை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow