குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கூடாநட்பு கேடாக முடியும்.. தனுசு ராசிக்காரர்களே கவனம்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 13, 2024 - 15:05
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கூடாநட்பு கேடாக முடியும்.. தனுசு ராசிக்காரர்களே கவனம்

பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால், விறுவிறுப்பாக முன்னேறக் கூடிய ஆண்டுங்க. அலுவலகத்துல அனுகூலக் காற்று வீசத்தொடங்கும்க. அது தொடரணும்னா, முழுமையான திட்டமிடலும் நேரம்தவறாமையும் அவசியம்க. ஏற்றம் என்பதே ஏக்கமாக இருந்த நிலை மாறும்க. சிலருக்கு அலுவலகப் பணியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்க. யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைக்கறதோ, உங்க விஷயத்துல பிறரை அனுமதிக்கறதோ வேண்டாம்க. கோப்புகளைக் கையாள்வதிலும் பணத்தைக் கையாள்வதிலும் கவனம் முக்கியம்க.

இல்லத்துல உங்க வாக்கு செல்வாக்கு பெறும்க. குலதெய்வத்தை மனதாரக் கும்பிட்டா, தடைப்பட்ட விசேஷங்கள் தடைநீங்கி கைகூடும்க. குடும்பத்து பெரியவர்கள் உடல்நலத்துல கவனம் செலுத்தணும்க. வாரிசுகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த இடைவெளி மறையும்க. வாழ்க்கைத் துணையால வசந்தம் வரும்க. சிலருக்கு பிரிந்திருந்த நிலை மாறி சேரும் சந்தர்ப்பம் அமையும்க. வீடு, மனை, வாகனம் வாங்கும் சமயத்துல பத்திரங்கள்ல கவனமா இருங்க. பொது இடத்துல குடும்ப விஷயங்கள் எதையும் பேசவேண்டாம்க.

செய்யும் தொழில்ல வளர்ச்சி நிலை உருவாகும்க. அது நிலைக்க, தளர்ச்சி இல்லாத உங்க உழைப்பு முக்கியம்க. அயல்நாட்டு வர்த்தகத்துல புதிய முதலீடுகள் லாபம் தரும்க. கூட்டுத் தொழில்ல வீண் சந்தேகம் வேண்டாம்க.. பங்குவர்த்தகத்துல அனுபவம் இல்லாம இறங்க வேண்டாம்க. தொழில் சார்ந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் தீர்வாகும்க. 

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு திடீர் பொறுப்பு, பதவி கிடைக்க வாய்ப்பு உண்டுங்க. அதேசமயம் சலிக்காத செயல்களும் கவனமாக இருப்பதும் முக்கியம்க. மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்போது உங்களுக்குக் கீழான யாரையும் பழிவாங்க நினைக்க வேண்டாம்க. கூடாநட்பு கேடாக முடியும், சஞ்சலமும் சபலமும் சற்றும் எட்டிப் பார்க்காம கவனமா தவிருங்க. 

மாணவர்கள் சோம்பலைத் தவிர்த்தால் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறக்கூடிய காலகட்டம்க. செல்லும் இடங்களின் சட்டதிட்டங்களை முழுமையா மதிச்சு நடங்க.

கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும்க. பெருமை, புகழ், அந்தஸ்து வரும் சமயத்துல தீயசகவாசம் தீயாகச் சுடும் உடனே விலக்கிடறது நல்லதுங்க.

வாகனத்துல சிறு பழுது இருந்தாலும் உடனே சரி செய்துடுங்க. இரவில் தொலைதூரம் தனியே செல்வதைத் தவிருங்க.

உணவுப் பழக்கத்துல கவனம் செலுத்துங்க. வறுத்த, பொரித்த உணவுகளை இயன்ற வரை தவிருங்க. வயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாளம், நரம்பு உபாதைகள் வரலாம்க.

இந்த ஆண்டு முழுக்க,நரசிம்மரை வணங்குங்க. நாளெல்லாம் திருநாளாகும்.

 யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow